முக்கிய செய்திகள்:
மக்களவை முதல்கட்ட வாக்குப்பதிவு : மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

மக்களவை முதல்கட்டத் தேர்தல் அசாம், திரிபுரா மாநிலங்களில் நேற்று அமைதியாக நடைபெற்றது. அசாமில் 72.5 சதவீதமும் திரிபுராவில் 85 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

தேர்தல் குறித்து துணை தேர்தல் ஆணையர் அலோக் சுக்லா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

மாலை ஐந்து மணி நிலவரப்படி அசாமில் 72.5 சதவீதம் மற்றும் திரிபுராவில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பொதுமக்கள் இன்னும் வரிசையில் நின்று கொண்டிருப்பதால் சதவீத எண்ணிக்கை உயரும். ஆங்காங்கே மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட சிறு, சிறு கோளாறுகள் உடனடியாக சரிசெய்யப்பட்டன.கடந்த ஆண்டு அசாம் மாநிலம் முழுவதும் 69.6 சதவீத வாக்குகள் பதிவானது.

அசாமில் இதுவரை ரூ.1.13 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

திரிபுரா மாநிலம் குறித்து தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஆசிஷ் வஸ்தவா கூறியதாவது:

ஒரே தொகுதியான திரிபுரா மேற்கில் மாலை ஐந்து மணி நிலவரப்படி 85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த ஆண்டு 86.25 சதவீதமாக இருந்தது. இங்கு 5521 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

மேலும் செய்திகள்