முக்கிய செய்திகள்:
பாஜக தேர்தல் அறிக்கை குறித்து : தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சார்பில் மூத்த தலைவர் மோதிலால் வோரா, தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: “முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருப்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி விதிமுறை மீறலாகும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை மீறி பாஜக இவ்வாறு நடந்து கொண்டுள்ளது.

அந்த அறிக்கையில் ராமர் கோயில் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மதச்சார்பற்றத் தன்மைக்கு எதிரானதாகும்.

மதம் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பெயரால் வாக்கு சேகரிக்கக் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறை மீறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்