முக்கிய செய்திகள்:
ஒடிசாவில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நடைபெறவில்லை : ராகுல் காந்தி பேச்சு

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம் செமில்குடா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில்;,

ஒடிசாவில் சில சுரங்க மாபியா கும்பல்கள் மாநிலத்தின் இயற்கை வளங்களை கொள்ளையடித்து செழித்து கொழித்து வளர்கின்றன. ஆனால் பழங்குடியின மக்களுக்கு சிறு நன்மைகூட கிடைப்பது இல்லை.

பழங்குடியின மக்களின் நல் வாழ்வுக்காக மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி வருகிறது. ஆனால் அந்தப் பணம் மலைவாழ் கிராம மக்களை சென்றடையவில்லை. மத்திய அரசின் நிதியை மாநில அரசு வேறு திட்டங்களுக்கு திருப்பி விடுகிறது.

ஏழைகள், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. பழங்குடி யின மக்களோடு எங்களது குடும்பத்துக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. நான் பழங்குடியின மக்கள் மத்தியில் இருப்பதையே அதிகம் விரும்புகிறேன் என்றார்

மேலும் செய்திகள்