முக்கிய செய்திகள்:
தேர்தலை புறக்கணிக்க மாவோயிஸ்டுகள் புதிய யுக்தி

பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி மாவோயிஸ்ட் அமைப் பினர் முதன்முறையாக பொது மக்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "செல்போன் வாடிக்கையாளர்கள் பல்க் எஸ்எம்எஸ் அனுப்பி வருகின்றனர். அதில், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள், தேசியவாதிகள் மற்றும் புரட்சிகர மக்கள் ஆகியோர் வரும் பொதுத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) எல்லை மண்டலக் குழு செய்தித் தொடர்பாளர் அவினாஷ் சார்பில் இந்த எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தேர்தலின்போது பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்துமாறு தங்களது அமைப்பின் தொண்டர்கள், மக்கள் விடுதலை கொரில்லா படை உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு மாவோயிஸ்டுகள் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்