முக்கிய செய்திகள்:
பிரதமர் நாற்காலியை கைப்பற்றுவது மட்டுமே பாரதிய ஜனதா கட்சியின் குறிக்கோள் : சோனியா பேச்சு

ஹரியாணா மாநிலம் மேவாத் நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியது:

"இந்தத் தேர்தல் நாட்டின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேர்தல் மட்டும அல்ல. நம் நாட்டின் சுதந்திர போராளிகள், முன்னோர்கள் நமக்காக மிகவும் போராடி, பல துன்பங்களையும் எதிர்க்கொண்டு நாட்டிற்கு அளித்துள்ள அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும்.

நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் குறிக்கோள் பிரதமர் நாற்காலியை கைப்பற்றுவது மட்டுமே.

இந்தியா ஒரு தரப்பினருக்கான நாடு அல்ல, பல தரப்பட்ட அனைத்து மக்களையும் இணைத்த நாடு இந்தியா. இதில் எல்லா மக்களும் அவர்களுக்கு உரிய உரிமையை அடைய காங்கிரஸ் என்றும் போராடும்.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 10 ஆண்டுகளில், மேவாத் போன்ற பல்வேறு பின்தங்கிய பகுதிகள் வளர்ச்சியை கொண்டு வந்துள்ளது. இத்தகைய பணிகளை வேறு எந்த அரசாலும் செய்திருக்க முடியாது.

மேவாத்தில் இதற்கு முன்னாள் இருந்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கும், தற்போது காங்கிரஸ் அரசு கொண்டுவந்திருக்கும் வளர்ச்சிக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் மாற்றங்களை உணர முடியும்.

மேலும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட, அனைவருக்கும் சுகாகாரம், பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு சட்டம், ஊரக வேலை வாய்ப்பு திட்டம், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு மற்றும் தகவல் உரிமை சட்டம் போன்ற பல வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டது” என்றார் சோனியா காந்தி.

மேலும் செய்திகள்