முக்கிய செய்திகள்:
பத்ம பூஷண் விருது வைரமுத்து, கமல்ஹாசன் பெற்றனர்

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை ஆற்றியவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டவர்களுக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பத்ம பூஷண் விருதுகள் வழங்கும் விழா இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. முதலாவதாக டாக்டர் ரகுநாத் ஆனந்த் மஷில்கருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன், வைரமுத்து உள்ளிட்ட 11 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. நடிகை வித்யா பாலன் உள்ளிட்ட 53 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவில் துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ஷிண்டே மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்