முக்கிய செய்திகள்:
சோனியாவுக்கு மோடி சரமாரி கேள்வி

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், "தேசப்பற்றை பற்றி பேசும் சோனியா காந்தி, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல உதவி செய்தது யார் என்பதை தெளிவுபடுத்தவேண்டும்" என்றார்.

இத்தாலிய மாலுமிகள் இருவரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக இத்தாலி சென்று விட்டு இந்தியா திரும்பாத போது உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டதை மோடி சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்தியாவுக்கான இத்தாலிய தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் தான் இத்தாலி வருத்தம் தெரிவித்து மாலுமிகளை திருப்பி அனுப்பி வைத்தது என்றார்.

மாலுமிகள் இருவரும் இத்தாலி செல்ல உறுதுணையாக இருந்தது யார், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட உத்தரவிட்டது யார் என மோடி கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசுகையில் "டெல்லியில் அருணாச்சல் மாணவன் நிடோ டானியம் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அசாம் தேர்தல் பிரச்சாரத்தின் போது சோனியா வருத்தம் தெரிவிக்கவில்லை. மாணவன் மரணத்துக்கு காங்கிரஸ் வெட்கப்படாதது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

மேலும் செய்திகள்