முக்கிய செய்திகள்:
நடிகை ரம்யா தனியாகவே பிரச்சாரம் செய்து வருகின்றார் : ராகுல்காந்திக்கு கடிதம்

கோஷ்டிப் பூசல் காரணமாக, கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நடிகை ரம்யாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாமல் உள்ளூர் காங்கிரஸார் புறக்கணித்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரம்யா, தனியாகவே பிரச்சாரம் செய்து வருகின்றார்.

இந்த தொகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ரம்யா வெற்றி பெற்றதால், கட்சி மேலிடம் இந்த முறையும் அவருக்கே சீட் வழங்கியுள்ளது.

இதனால் கட்சிக்காக பாடுபட்டு வரும் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந் துள்ளனர். அவர்கள் ரம்யாவை வீழ்த்த முடிவெடுத்து, அவருக்கு எதிராக செயல் படுவதாக தெரியவருகிறது.

முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் நடிகர் அம்பரீஷ் ஆகியோரின் தீவிர முயற்சி காரணமாகவே ரம்யாவிற்கு முதலில் வாய்ப்பு வழங் கப்பட்டது. ஆனால், எஸ்.எம்.கிருஷ்ணா முதுமை காரணமாக ஒதுங்கி உள்ள நிலையில், நடிகர் அம்பரீஷும் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, இந்தத் தொகுதியில் செல்வாக்கு மிக்க மாதே கவுடா, சத்யானந்தா ஆகிய கட்சியின் மூத்த தலைவர்களை நம்பி மீண்டும் களமிறங்கினார். கடந்த 26-ம் தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது கடைசி நேரத்தில் இருவரும் எந்தக் காரணமும் சொல்லாமல் புறக்கணித்தனர். இதனால் அதிர்ந்து போன ரம்யா தனியாக வே பிரச்சாரத்தை தொடங்கினார்.

இதுபற்றி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு ரம்யா கடிதம் எழுதியுள்ளார்.

"மண்டியா தொகுதியில் மூத்த தலைவர் களான மாதே கவுடா, சத்யானந்தா ஆகி யோர் கோஷ்டி பூசலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய ஆதரவாளர்கள் யாரையும் தேர்தல் வேலை பார்க்கக் கூடாது என ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளனர். சாதியின் காரணமாக என்னை புறக்கணிக்கின்றனர். இதுபற்றி விசாரிக்க வேண்டும்" என அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்