முக்கிய செய்திகள்:
ராகுலுக்கு மோடி பதிலடி

கர்நாடக மாநிலம் பிஜப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் “நம்பர்-ஒன்” என்று அவரது தாயார் சோனியா காந்தியால் அறிவிக்கப்பட்டதை குறை சொல்வதை விட்டுவிட்டு நாட்டை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.

குஜராத் முன்மாதிரியை நீங்கள் (ராகுல்) பலூன் என்று கருதினால் நான் உங்களிடம் ஒன்றை கேட்கிறேன், உங்களுடைய தாயாரை நீங்கள் நம்புகிறீர்களா? உங்களுடைய தாயார்தான் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவர். அந்த அறக்கட்டளை தான் குஜராத் “நம்பர்-ஒன்” என்று அறிவித்தது. அப்படியென்றால் நீங்கள் உங்கள் தாயாரின் அறிவிப்பில் பலூன் என்ற வார்த்தையை கேட்டீர்களா? அல்லது உங்கள் தாயார் அப்போது பலூனை வெளியிட்டார்களா?

நீங்கள், உங்கள் கட்சி மற்றும் 18 முதல்வர்களும் 2002ல் குஜராத்திற்கு வந்தீர்கள். குஜராத் என்ற பலூனை பற்றி பல பொய்களை சொன்னீர்கள். ஆனால் உங்கள் பொய்யான பலூனை குஜராத் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்