முக்கிய செய்திகள்:
உத்திர பிரதேச முதல்வர் மீது செருப்பு வீசிய இளைஞர் கைது

உத்திர பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசிய 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கைது செய்யப்பட்டார். காசியாபாத் மாவட்டத்தின் கவிநகர் பகுதியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் இன்று அகிலேஷ் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் நடந்தது.

அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் தன்னுடைய நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்ததற்கு கண்டனம் தெரிவித்ததுடன் திடீரென்று அகிலேஷ் மீது செருப்பை வீசினார். இளைஞர் வீசிய செருப்பு அகிலேஷ் மீது விழுவதற்கு பதிலாக ஊடகங்கள் இருந்த இடத்தில் விழுந்தது.

இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்