முக்கிய செய்திகள்:
ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணம் கொடுத்தால் வழக்கு: தேர்தல் கமிஷன்

பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வாக்காளர்களை சந்தித்து வருகிறார்கள்.

இதற்கிடையே ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகனங்களில் பணம் கொண்டு செல்வதை பறக்கும் படை கண்காணிக்கின்றனர். வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கேமரா மூலம் வேட்பாளர்கள் பிரசாரம், தேர்தல் பணிமுனைகள் கண்காணிக்கப்படுகின்றன. ஆனாலும் கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு கண்ணில் மண்ணை தூவும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் ஒட்டு சேகரிக்க செல்லும் போது, தொண்டர்கள் பல்வேறு விதமான வரவேற்புகளை கொடுக்கிறார்கள். தலைவர்களை வரவேற்கும் வகையில் விதவிதமாக ஆட்டம்–பாட்டங்கள், ஏற்பாடு செய்யப்படுகின்றன பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும் தங்கள் பகுதிக்கு வரும் வேட்பாளர்களை தொண்டர்கள் வரவேற்கிறார்கள்.

பெண்கள் தமிழ், கலாச்சாரமான ஆரத்தி எடுத்து வேட்பாளர்களை நெற்றியில் பொட்டு வைத்து வாழ்த்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கு இப்போது தேர்தல் கமிஷன் ‘வேட்டு’ வைத்து விட்டது.

வேட்பாளர்களை வரவேற்று ஆரத்தி எடுப்பது தவறல்ல. ஆரத்தி தட்டில் வேட்பாளர் பணம் வைத்தால் தேர்தல் விதிமுறையின்படி குற்றமாக கருதப்படுகிறது. அதுவும் ஒரு வகையான லஞ்சமாகும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

மேலும் செய்திகள்