முக்கிய செய்திகள்:
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆகிறது. கூட்ட நெரிசல் காரணமாக நேற்று மாலை 5 மணியில் இருந்து 300 ரூபாய் கட்டண தரிசனம் நிறுத்தபட்டது.

கால்நடையாக செல்லும் பக்தர்கள் தரிசனம் செய்ய 9 மணி நேரம் ஆகிறது. நேற்று மட்டும் 47,472 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31 கம்பார்ட் மெண்ட்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்திருக்கிறார்கள்.

தங்கும் அறைக்கு முன் பதிவு செய்ய பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருக்கிறார்கள். முடி காணிக்கை செலுத்தவும் 4 மணி நேரம் ஆகிறது. நேற்று ஒரே நாளில் ரூ.2.10 கோடி உண்டியல் மூலம் கிடைத்தது.

திருப்பதி மலை வனப் பகுதியில் தொடர்ந்து தீப்பிடித்து வருகிறது. இன்று காலையில் கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில் காட்டுப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஸ்ரீவளிமெட்டு வழியாக செல்லும் கால்நடை பாதை மூடப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அலிபிரி பாதை வழியாக மட்டுமே கால்நடை பாதை செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் செய்திகள்