முக்கிய செய்திகள்:
மோடியின் பிரதமர் கனவு பலிக்காது: லாலு பிரசாத் யாதவ்

பிரிவினைவாதியான நரேந்திர மோடியின் பிரதமர் கனவு பலிக்காது என ராஷ்டிரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

மோடி ஒரு பிரிவினைவாதி அவர் பிரதமர் ஆனால இந்திய தேசத்தை உடைத்து விடுவார் என பத்திரிகையாளர் சந்திப்பில் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

எனவே, தேச நலனில் அக்கறை கொண்டு, நாட்டு மக்கள் நரேந்திர மோடி பிரதமராக வாய்ப்பு அளிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து மோடி போட்டியிட இருப்பதை குறிப்பிட்டு பேசிய லாலு, பிரிவினையை பின்பற்றி நாட்டின் ஒற்றுமைக்கும், கட்டுப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் மோடியை, வாரணாசியின் சிவன் கூட மன்னிக்க மாட்டார் என்றார்.

மேலும் செய்திகள்