முக்கிய செய்திகள்:
பா.ஜ.க.வை விட்டு வெளியேற மாட்டேன்: ஜஸ்வந்த் சிங்

பா.ஜ.க.வின் மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்கிற்கு மக்களவை தேர்தலில் அவரது சொந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் சுயேட்சையாக இத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், “தனிமனிதரை முன்னிலைப்படுத்துவது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. கட்சிக்கும் அது தீங்காகும். கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங் அவரது விருப்பப்படி வேண்டுமென்றே என்னை போட்டியிலிருந்து ஒதுக்கி விட்டார். என்னால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் எக்காரணத்தை கொண்டும் நான் பா.ஜ.க.வை விட்டு வெளியேறமாட்டேன். அதுபற்றி கட்சியே முடிவு செய்யட்டும்” என்றார்.

நான் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் டெல்லியில் இருந்தோ ஜெய்ப்பூரில் இருந்தோ கட்சியில் இருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார்.

பா.ஜ.க.வை விட்டு ஜஸ்வந்த் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் இந்த பேட்டி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்