முக்கிய செய்திகள்:
பா.ஜனதா கூட்டணியில் தீண்டத்தகாதவர் மோடி: மொய்லி விமர்சனம்

மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி இன்று பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மோடி பிரதமர் ஆக முடியாது. அவர் தனது கட்சிக்குள் சர்வாதிகார வழியில் சென்றுகொண்டிருக்கிறார். குஜராத்தில் அவர் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தலைவர்களை வெளியேற்றிவிட்டார். இப்போது, நாடு முழுவதும் அந்த வேலையை செய்யத் தொடங்கியுள்ளார்.

பாராளுமன்ற அமைப்பை மதிக்காத மோடியை இறுதியில் நாடு ஓரங்கட்டிவிடும். தேசிய ஜனநாயக கூட்டணிகளுக்கு மோடி தீண்டத்தகாதவராக மாறிவிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்