முக்கிய செய்திகள்:
இந்திய மீனவர்கள் சுட்டுக் கொன்ற விவகாரம் : உம்மன்சாண்டி பிரதமருக்கு கடிதம்

கேரள முதல்வர் உம்மன்சாண்டி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இத்தாலிய கடற்படையினர் வழக்கில் இந்தியா இத்தாலிய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பதை இந்தியாவுக்கு வரும் ஐ.நா. பொது அவையின் தலைவர் ஜான் ஆஷி சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் இவ்வழக்கு நீர்த்துப் போய்விடும் என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் சில ஊடகங்கள் கூறிவருகின்றன.

இந்திய சட்டங்களின்படி, எவ்வித வழக்கு விசாரணையும் இன்றி கடற்படையினரை விடுவிப்பது இந்திய நீதிமன்றங்களின் நற்பெயரையும் தரத்தையும் குறைத்துவிடும். இவ்வழக்கு விசாரணையின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேரள மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனவே இந்த வழக்கில் ஐ.நா. தலையிட்டாலும் இத்தாலிய கடற்படையினரை விடுவிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்