முக்கிய செய்திகள்:
மோடிக்கு எதிராக தீய சக்திகள் உருவாகி வருகின்றன : பாபா ராம்தேவ்

ராம்லீலா மைதானத்தில் வரும் 23ம் தேதி பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியை நடத்துகிறார் பாபா ராம்தேவ்
இதுகுறித்து ராம்தேவ் கூறியதாவது:-

நடைபெற உள்ள யோகா மகோத்சவம் ஒரு சமூக, ஆன்மிக நிகழ்ச்சியாகும். இதில் மோடி கலந்து கொள்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்திகூட இதில் பங்கேற்றால் வரவேற்போம். சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு தியாகி அந்தஸ்து வழங்க கோரியும், யோகக்கலையை வளர்த்தல் மற்றும் பகுத்தறிவுடன் கூடிய ஆன்மிக அறிவையும் வலியுறுத்தி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த யோகா நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் 650 மாவட்டங்களிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் பங்குபெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோடியால் மட்டுமே நிலையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்க முடியும். மோடிக்கு எதிராக பல தீய சக்திகள் உருவாகி வருகின்றன. உண்மைக்கு புறம்பான பல குற்றச்சாட்டுக்கள் மோடிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன. மோடி பிரதமராவதை தடுக்க பல தீயசக்திகள் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. நேரம் வரும்போது அவைகள் தோற்கடிக்கப்படும். காங்கிரஸ் ஏற்கனவே அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மியும் காங்கிரசுடன் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு ராம்தேவ் கூறினார்.

 

மேலும் செய்திகள்