முக்கிய செய்திகள்:
பகுஜன் சமாஜ் தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட மாயாவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மற்ற எதிர்க்கட்சிகளை போல் அல்லாமல் அனைத்து வேட்பாளர்களின் பட்டியலையும் ஒரே தடவையில் வெளியிட்டுள்ளோம். மத்தியில் ஆட்சியை பிடிக்க பகுஜன் சமாஜ் கட்சி முழுமையாக ஆயத்தம் செய்து கொண்டுள்ளது. மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சியமைப்போம்.

நாங்கள் ஏற்கனவே மூன்று முறை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து உ.பி.யில் ஆட்சி அமைத்துள்ளோம். எனினும், அவர்களின் கொள்கையிலும், எண்ணத்திலும் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் கூட்டணியில் இருந்தபோது எங்களது கொள்கைப்படியே ஆட்சி நடத்தினோம். அதில் அவர்கள் தலையிட்டதால் அவர்களிடமிருந்து விலகிவிட்டோம்.

வேலைவாய்ப்பின்மை, ஊழல், வறுமை போன்ற வழக்கமான பிரச்சனைகளை முன்வைப்பதற்குப் பதிலாக, வரும் தேர்தல் மதவாதம், மதச்சார்பின்மை கொள்கைகளுக்கு இடையிலான போட்டியாக இருக்கும். இந்த உண்மையை மனதில் வைத்தே, பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்