முக்கிய செய்திகள்:
விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் பெற்றுத் தரும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் : ஆம்ஆத்மி

ஊழல் ஒழிப்பை பிரதான கொள்கையாக வைத்து செயல்படும் ஆத்ஆத்மி கட்சி தற்போது மக்களின் இதர பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது. இது தொடர்பாக ஆத்ஆத்மி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:–

விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், அவர்களின் முன்னேற்றத்துக்கும் தனி கமிஷன் அமைக்கப்படும். இந்த கமிஷன் அளிக்கும் சிபாரிசுகளின் அடிப்படையில் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் பெற்றுத் தரும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

பயிர் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு வங்கி கடன் போன்ற சலுகைகள் அளிக்கப்படும். குறிப்பாக சிறிய விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்