முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் கட்சிக்காக 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன் : நடிகை நக்மா

மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நக்மா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மீரட் நகருக்கு சென்ற அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர்களுடன் கலந்துரை யாடிய நக்மா, தனது வெற்றிக்கு ஒத்துழைப்பு தருமாறு கட்சியின ருக்கும் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தள பிரமுகர் களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். நடிப்புத் துறையில் நான் அளித்த பங்களிப்பைப் போல, என்னால் முடிந்த அளவுக்கு அரசியலிலும் கடுமையாக உழைத்து வருகிறேன். எனவே, விஐபி என்ற முறையில் அல்லாமல், எனது கட்சிப் பணியை முன்வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளேன்" என்றார்.

 

மேலும் செய்திகள்