முக்கிய செய்திகள்:
ஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கு பின்னர் காணாமல் போய் விடும் : சிவசேனா

காங்கிரஸ் 200 தொகுதிகளை கைப்பற்றும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனை விமர்சித்து சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சிப்பத்தரிக்கையான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார்.

''நாடெங்கும் காங்கிரசுக்கு எதிரான அலை வீசுகிறது. மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை விரும்பவில்லை. இந்நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கிறது. இது அவரின் தாயார் சோனியா காந்திக்கும் அதிர்ச்சி அளித்திருக்கும்.

காங்கிரஸ் வெற்றிபெறும் என்று ராகுல் கூறுவது ஓட்டைப் பலூனில் காற்றை நிரப்புவதற்கு சமம். மாறாக நரேந்திர மோடி தலைமையின் கீழ் பா.ஜ.க கூட்டணியானது 275 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கு பின்னர் காணாமல் போய் விடும்” என்று உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்