முக்கிய செய்திகள்:
இந்திய-இலங்கை தமிழர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்

கச்சத்தீவில் ஜாதி, மத, வேறு பாடு இன்றி நடைபெற்ற புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா வின்போது இலங்கையில் உள்ள உறவினர்களை ராமேஸ்வரம் தமிழர் கள் சந்தித்து மகிழ்ந்தனர்.

புனித அந்தோணியார் மீனவர்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் கச்சத்தீவில் புனித அந்தோணியார் தேவாலயத்தை நிறுவினார். பின்னர் ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திலோ கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திரு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

1983-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு திருவிழா நிறுத்தப்பட்டது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுற்ற பின்னர் 2011-ம் ஆண்டில் இருந்து கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா இந்திய–இலங்கை அரசுகளின் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா குறித்து தங்கச்சிமடம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசீலன் செய்தியாளரிடம் கூறும்போது, இத்திருவிழாவில், பங்கேற்றதன் மூலம், மன்னார் மாவட்டத்தில் உள்ள எனது உறவினர்களை சந்திக்க நேர்ந்தது. அவர்களை மீண்டும் சந்திக்க இன்னும் ஓராண்டு காலம் நான் காத்திருக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்