முக்கிய செய்திகள்:
ராகுல் ஆவேச பேச்சு

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், பிரச்சார குழு தலைவருமான ராகுல் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சி தோல்வியடையப்போகும் கட்சியல்ல என்றும் 2009 தேர்தலில் பெற்ற வெற்றியை விட அதிக தொகுதிகளில் தங்கள் கட்சி வெற்றி பெறும் என்றார்.

மூன்றாவது முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி கண்டிப்பாக அமையும் என்ற அவர், 10 வருடங்களாக ஆட்சி நடத்துவதால் மக்களுக்கு தங்கள் மீது சிறிய அளவிலான அதிருப்தி நிலவுவதாக ஒப்புக்கொண்டார். நிதியமைச்சர் ப. சிதம்பரம் தங்கள் கட்சி தோல்வி அடையப்போகும் கட்சி என ஒத்துக்கொண்டதை அவர் மறுத்தார்.

கடுமையான போட்டியை சந்திக்கும் தங்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என கூறிய அவர், எவ்வளவு தொகுதிகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தான் குறி சொல்பவனல்ல என்று தெரிவித்தார்.

பல நல்ல திட்டங்களை தாங்கள் செய்தபோதும், அது பற்றி மக்களிடம் எடுத்து கூறும் முயற்சியை செய்யமால் தவறவிட்டதாக அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும் செய்திகள்