முக்கிய செய்திகள்:
மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி ஆலோசனை கூட்டம் பெங்களூரில் இன்று நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டியிடவேண்டும் என வலியுறுத்தினர். அவர்களது கருத்துக்களை கேட்டபின் இறுதியாக பேசிய கெஜ்ரிவால் வாரணாசி தொகுதி மக்களிடம் இது தொடர்பாக கருத்து கேட்க உள்ளதாக கூறினார். அத்தொகுதி மக்கள் மோடியை எதிர்த்து தன்னை போட்டியிட சொன்னால் தான் போட்டியிட தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்