முக்கிய செய்திகள்:
மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி

மும்பையில் 7 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தரைமட்டமாகி கிடந்த அந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பெண் உள்பட 6 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததை ஒருவர் செல்போன் கேமராவில் படம் பிடித்துள்ளார்.

இந்த கட்டிடம் பாதுகாப்பற்றது என்று நகர அதிகாரிகள் ஏற்கனவே கூறியிருந்தனர். இருந்தும் அங்கு சிலர் சட்டவிரோதமாக வசித்து வந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். பாழடைந்த அந்த கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து அருகில் உள்ள குடிசைப்பகுதியில் விழுந்ததால் மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்