முக்கிய செய்திகள்:
திருமலை கோவிலில் கருட சேவை ரத்து

திருமலை ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாரி புஷ் கரணியில் மொத்தம் 5 நாள் நடக்கும் இந்த தெற்ப உற்சவத்தில் முதல் நாளில் சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் சமேதருடன் ஸ்ரீராமர் அலங்காரத்தில் மலையப்பசாமி 3 முறை வலம் வந்தார்.

2–வது நாளான நேற்று ருக்மணி சமேதராக கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்பசாமி வலம் வந்தார். தெப்ப உற்சவத்தை முன்னிட்டு கோவிலில் சகஸ்ரதீப் அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது.

மேலும் 3 நாட்களும் ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம், சகரஸ்ர தீப அலங்கார சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்து உள்ளது.

திருமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் கருட சேவை நடைபெறுவது உண்டு. இந்த ஆண்டு பவுர்ணமி தினமாக வருகிற ஞாயிற்றுக்கிழமை தெப்ப உற்சவ நிறைவு விழா நடைபெறுவதால் கருட சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்