முக்கிய செய்திகள்:
பா.ஜனதா கட்சியின் 3-வது வேட்பாளர் பட்டியல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3-வது வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா கட்சி இன்று வெளியிட்டது. 74 பேர் கொண்ட இந்த பட்டியலில் மூத்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவரான சுஷ்மா சுவராஜ், மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார். எஸ்.எஸ்.அலுவாலியா டார்ஜிலிங் தொகுதியில் களமிறங்குகிறார். சமீபத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்த ராம் கிரிபால் யாதவ், லல்லுபிரசாத் யாதவின் மகள் மிசாவை எதிர்த்து பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

ராஜீவ் பிரதாப் ரூடி சரண் தொகுதியிலும், கீர்த்தி ஆசாத் தர்பங்கா தொகுதியிலும், ஷாநவாச் உசேன் பாகல்பூர் தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.யஷ்வந்த் சின்காவின் தொகுதியான ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரியாபாக்கில் அவரது மகன் ஜெயந்த் சின்கா போட்டியிடுகிறார். பாட்னா சாகேப் தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் சத்ருகன் சின்காவிடம் ஆலோசனை நடத்தி, அதன்பின்னர் அந்த தொகுதிக்கான வேட்பாளரை அறிவிப்பதாக பா.ஜனதா கூறியுள்ளது.

 

மேலும் செய்திகள்