முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 71 பேர் கொண்ட இந்த பட்டியலில் மத்திய மந்திரிகள் இடம்பெற்றுள்ளனர். இளைஞர்களுக்கு 35 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி நாராயணசாமி, புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மற்றொரு மந்திரியான சசி தரூர், திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார்.

எர்ணாகுளம் தொகுதியில் கே.வி.தாமஸ், உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் நக்மா, சண்டிகரில் முன்னாள் மந்திரி பவன் குமார் பன்சால், கேரள மாநிலம் சாலக்குடியில் பி.சி.சாக்கோ, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சுபோத் காந்த் சகாய் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சாதவ் மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி தொகுதியிலும், உ.பி. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி லக்னோவிலும், திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த ராஜ் பப்பர் காசியாபாத் தொகுதியிலும் களமிறங்குகின்றனர்.

 

மேலும் செய்திகள்