முக்கிய செய்திகள்:
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு: ஒரு வருடத்திற்குள் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணையை ஒர் ஆண்டு காலத்திற்குள் கீழ்நிலை நீதிமன்றங்கள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், அவ்வாறு ஒராண்டுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட நீதிபதி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளில் தினமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையை கோரியிருந்தது.

அதன் அடிப்படையில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கினை ஒரு வருடத்திற்குள் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கிரிமினல் வழக்கில், இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான காலத்துக்கு ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ, தண்டிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வின் பதவி உடனடியாக பறிபோகும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலையில் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவுப்படி, கால்நடை தீவண ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரீய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரஷீத் மசூத் அகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

 

மேலும் செய்திகள்