முக்கிய செய்திகள்:
மக்களவை தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி கட்சி

மத்தியப் பிரதேசம், அசாம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ், "ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில், திருப்பதி, மசூலிப்பட்டினம், வாராங்கல், ஆராக்கு, நர்ஸாபுர ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாதி வேட்பாளர்களை நிறுத்தப்படுகின்றனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் விதிஷா, போபால், ரேவா, ஷாதுல், கஜூராவோ, பிந்த் ஆகிய 6 தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டியிடுகிறது.

அசாம் மாநிலத்தில் கரீம்கஞ்ச், சிலாச்சர், துப்ரி, பர்பேட்டா, ஜோர்ஹத், மங்கள்டோய் ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாதி களம் காண்கிறது" இவ்வாறு ராம் கோபால் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்