முக்கிய செய்திகள்:
நரேந்திர மோடிக்கு ராஜ் தாக்கரே கட்சி ஆதரவு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளிப்பதாக ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் தனது தாய்க் கட்சியான சிவசேனை போட்டியிடும் மக்களவைத் தொகுதிகள் அனைத்திலும் வேட்பாளர்களை ராஜ் தாக்கரே அறிவித்துள்ளார். ஆனால், அதே சமயம், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அவர் வேட்பாளர்களை அறிவிக்க வில்லை.

இதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும், சிவசேனைக்கு எதிரான நிலைப் பாட்டையும் மகாராஷ்டிர நவநிர் மாண் சேனை எடுத்துள்ளது.முதல் கட்டமாக 7 வேட்பாளர் களை கொண்ட பட்டியலை ராஜ் தாக்கரே அறிவித்துள்ளார். கட்சியின் எட்டாவது ஆண்டு நிறுவன நாளையொட்டி மும்பையில் ராஜ் தாக்கரே பேசியதாவது: “பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியை ஆதரிப்போம். மக்கள வைத் தேர்தலில் போட்டியிட்டு கட்சியின் வலிமையை வெளிப்படுத்துவோம்” என்றார்.

 

மேலும் செய்திகள்