முக்கிய செய்திகள்:
மேற்கு வங்க வளர்ச்சி பற்றி மம்தா பானர்ஜி பெருமிதம்

குஜராத்தை விட மேற்கு வங்கம் பின்பற்றி வரும் வளர்ச்சிப் பாதையே சிறந்தது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

மேற்கு வங்கம் பல சோதனைகளுக்கு மத்தியில் சாதனை புரிந்துவருகிறது. குஜராத் எந்தவிதமான பிரச்சினையையும் சந்திக்காமல் இன்றைய வளர்ச்சியை எட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் ஜங்கல் மஹால் பகுதியில் நிலவிய நக்ஸலைட் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கிறோம். தனி மாநிலம் கோரி போராடிய டார்ஜிலிங் மலைப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தியுள்ளோம். 2 லட்சம்

கோடி கடன் சுமை இருந்த போதிலும், அதை பொருட்படுத்தாது வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறோம்.

குஜராத்தில் பல ஆண்டுகளாக நீடித்த வளர்ச்சி காணப்படுகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் 34 ஆண்டு கால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் மிகவும் பின் தங்கியிருந்தோம். 50 ஆயிரம் ஆலைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு கோடி பேருக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை இருந்தது. அப்படிப்பட்ட நிலையிலிருந்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு திருப்பியுள்ளோம்” என்றார் மம்தா பானர்ஜி.

 

மேலும் செய்திகள்