முக்கிய செய்திகள்:
194 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது.


இதில் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆதார் அட்டை தலைவர் நந்தன் நிலகேணி, கிரிக்கெட் வீரர் முகமது கைப் உள்பட 194 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களில் 35 சதவீதம் பேர் 50 வயதுக்கு உள்பட்டவர்கள் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சோனியா காந்தி ரே பரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

போஜ்புரி நடிகர் ரவி கிஷன் உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் தொகுதி, ஒரியா நடிகர் அபர்ஜிதா மொகந்தி கட்டாக் தொகுதி, விஜய் மொகந்தி புவனேஸ்வரம் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

கிரிக்கெட் வீரர் முகமது கைப் உத்தரப் பிரதேசத்தின் புல்பூர் தொகுதியில் களம் இறங்குகிறார். இத்தொகுதி நேரு போட்டியிட்ட தொகுதி ஆகும். வாஜ்பாயின் சகோதரி மகள் கருணா சுக்லா சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் தொகுதி, நீதிபதி ஹனுமந்தப்பா கர்நாடகத்தின் பெல்லாரி, ஆதார் அட்டை ஆணையத் தலைவர் நந்தன் நிலகேணி பெங்களூர் தெற்கு தொகுதியில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி வேட்பாளர்களை இறுதி செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்தப் பட்டியலில் பல்வேறு எம்.பி.க்கள், அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்