முக்கிய செய்திகள்:
வன்முறையில் ஈடுபட வேண்டாம் : கேஜ்ரிவால் வேண்டுகோள்

தனது தடுப்புக் காவலைக் கண்டித்து, டெல்லி மற்றும் லக்னோவில் ஆம் ஆத்மி கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதற்கு அரவிந்த் கேஜ்ரிவால் மன்னிப்புக் கேட்டார். மேலும், தொண்டர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது எனவும் கேஜ்ரிவால் வலியுறுத்தினார்.

குஜராத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். இன்று புஜ் நகருக்கு வந்தார். அவரிடம், செய்தியாளர்கள் தடுப்புக் காவல் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர், "டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினரும் - பாஜகவினரும் கடும் மோதலில் ஈடுபட்டனர். தாங்கள் தாக்கப்பட்டு ஆம் ஆத்மி கட்சியினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன். மேலும், ஆம் ஆத்மி கட்சியினர் வன்முறையை ஒருபோதும் கையில் எடுக்க வேண்டாம் என்றார்".

 

மேலும் செய்திகள்