முக்கிய செய்திகள்:
தெலங்கானாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கிரண்குமார் வழக்கு

தனி தெலங்கானா உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தது.

கடந்த மாதம் 7 மற்று 17-ம் தேதிகளில், உச்ச நீதிமன்றத்தில் தெலங்கானா தனி மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத போது மனுவை ஏற்றுக்கொள்ள சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம் உருவாக்கத்திற்கு ஆரம்பம் முதலே கிரண்குமார் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கடும் எதிர்ப்பையும் மீறி தெலங்கானா மசோதா கடந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து கிரண்குமார் ரெட்டி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் செய்திகள்