முக்கிய செய்திகள்:
ஊழல், வாரிசு அரசியலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்:மம்தா

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கொல்கத்தா முதல்வர் மமதா கூறுகையில் கம்யூனிஸ்ட் களுடன் எந்த கட்சி வேண்டு மானாலும் இணைந்து எத்தகைய கூட்டணியை வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம்.

அதனால் பயன் ஏதும் இல்லை. மார்க்சிஸ்ட் கட்சியை மக்கள் நிராகரித்து விட் டனர். அது மூன்றாவது அணி யல்ல; அது சோர்வடைந்த அணி.

தேர்தலுக்கு பின்புதான் முக்கிய கூட்டணி உருவாக வாய்ப் புள்ளது. மத்தியில் கூட்டாட்சி முன்னணி ஆட்சியில் அமரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவோ, பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸோ இருக்கப் போவதில்லை.

ஊழல், வாரிசு அரசியலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தை தூண்டும் கட்சிகளைப் பார்த்து மக்கள் சோர்வடைந்துவிட்டனர்.

மேற்கு வங்கத்தில் திரிணா மூல் காங்கிரஸ் ஆட்சியில் செய்யப் பட்டுள்ள மேம்பாட்டு பணிகளுக்கு வெகுமதி அளிக்கும் வகையில் மக்களவைத் தேர்தலில் இக் கட்சிக்கு மக்கள் அமோகமாக ஆதரவு அளிப்பார்கள்.

இத்தேர்தலில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், அசாம், அருணாசலப் பிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடும் என்றார் மம்தா பானர்ஜி.

மூன்றாவது அணியில் இடம் பெறாததால் தனித்துவிடப் பட்டதாக உணர்கிறீர்களா என செய்தியாளர் கேட்டபோது, “அப்படியொன்றும் இல்லை என்றார் மம்தா.

பிரதமர் பதவிக்கான போட்டி யில் இருக்கிறீர்களா என்ற மற்றொரு கேள்விக்கு, “அது தொடர்பாக மக்கள் முடிவு செய் வார்கள். எனது 40 ஆண்டு கால போராட்ட வாழ்வில் மக்கள்தான் எனது ஊக்க சக்தியாக இருந்தனர். நாற்காலி அல்ல.

அதே சமயம், மத்தியில் பணி புரிந்த (ரயில்வே அமைச்சராக) அனுபவம் எனக்கு இருக்கிறது. இப்போது மாநில அரசில் பணியாற்றி வருகிறேன்.என்று மம்தா பானர்ஜி பதில் அளித்தார்.

பாஜக, காங்கிரஸுடன் திரிணமூல் காங்கிரஸ் ரகசிய தொடர்பு வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டை மம்தா பானர்ஜி மறுத்தார்.

இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸுக்கு இத்தேர்தலில் 60 முதல் 70 இடங்கள் மட்டுமே கிடைக்கும். பாஜக 150 முதல் 160 இடங்களில் வெற்றி பெறும் என்றார்.

 

மேலும் செய்திகள்