முக்கிய செய்திகள்:
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி வழங்க மறுக்கப்படுவது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'நாஸ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்த பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில், எச்.ஐ.வி. நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படக்கூடாது, அவர்கள் பள்ளியில் இருந்து நிறுத்தக்கூடாது என்று உத்தர பிறப்பிக்க கோரப்பட்டிருந்தது. மேலும், அத்தகைய குழந்தைகளுக்கு பள்ளிகளில் சலுகைகள் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

 

மேலும் செய்திகள்