முக்கிய செய்திகள்:
குடியரசுத்தலைவருக்கு பிரகாஷ் காரத் கடிதம்

அரசியல் சுயலாபம் கருதி கொண்டுவரப்பட உள்ள சில அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரணாபுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது ஊழல் ஒழிப்பு உள்பட சில மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போனது. எனினும், இவற்றை நிறைவேற்றுவதற்காக கூட்டத்தொடரை சிறிது காலத்துக்கு நீட்டித்து, அந்த மசோதாக்கள் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றி இருக்கலாம்.

அவ்வாறு செய்வதை விட்டு விட்டு, இப்போது அந்த மசோதாக் களை அவசர சட்டமாக இயற்றுவது குறித்து மத்திய அமைச்சரவை பரிசீலித்து வருகிறது.

தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்க வகை செய்யும் ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா வில் சில திருத்தங்களை மேற்கொள் ளவும் மத்திய அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.

புதிய மாநிலங்களை உருவாக்கு வது என்பது மிகவும் முக்கியமான பிரச்சினை. அரசியல் காரணங் களுக்காக இதுபோன்ற நடவடிக் கைகளை மேற்கொள்வதன் மூலம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

பொதுத் தேர்தல் வருவதையொட்டி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியின் நலனுக்காக அவசர சட்டம் கொண்டுவர திட்ட மிட்டிருப்பது சட்ட விரோதமான, ஜனநாயகத்துக்கு எதிரான மற்றும் நாடாளுமன்றத் தையே அவமதிக்கும் செயல் ஆகும்.

ஜனநாயக நடைமுறையையும், அரசியல் சாசன சட்ட நடைமுறை களையும் நன்கு அறிந்த, பொது வாழ்வில் அனுபவம் நிறைந்த குடியரசுத் தலைவர், ஜனநாயகத் துக்கு எதிராக, சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார் என நம்புகிறோம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்