முக்கிய செய்திகள்:
மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது

15-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் தெலுங்கானா தவிர பிற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், ஊழலுக்கு எதிராக மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார்.

இதையடுத்து நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஊழல் ஒழிப்பு மசோதா, வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்த மசோதா, மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அவசரச் சட்டம் கொண்டு வருவது பற்றி பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த யோசனை தள்ளி வைக்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை மீண்டும் அமைச்சரவை கூடுகிறது. அப்போது, ஊழலுக்கு எதிரான மற்றும் உரிமைகள் தொடர்பான அவசரச் சட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் தெரிகிறது. பல அவசர சட்டங்களை ஒரே நேரத்தில் கொண்டு வருவதற்குப் பதிலாக ஊழல் ஒழிப்பு மசோதா, வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்த மசோதா, மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான மசோதா ஆகியவற்றுக்கான அவசர சட்டங்களை மட்டும் கொண்டு வரலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்