முக்கிய செய்திகள்:
முன்னாள் ராணுவ தளபதி பா.ஜனதாவில் இணைந்தார்

வி.கே.சிங் இன்று இந்தியா கேட் அருகிலுள்ள அமர் ஜவான் ஜோதி நினைவகத்தை பார்வையிட்ட பின் டெல்லியிலுள்ள பா.ஜ.கவின் கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அவரை கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். அப்போது வி.கே.சிங் முறைப்படி தான் பாரதீய ஜனதாவில் இணைந்ததாக அறிவித்தார். அவருடன் சேர்ந்து முன்னாள் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் 100–க்கும் மேற்பட்டோர் பாரதீய ஜனதாவில் இணைந்தார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராணுவத்தில் இருந்து வருபவர்கள் அனைவரும் நாட்டைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். நான் தொடர்ந்து நாட்டிற்கு சேவை செய்யப்போகிறேன். நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு ஒரு தேசியவாதியாக நான் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்” என்று கூறினார்.

வரும் மக்களவை தோ்தலில் போட்டியிடுவீர்களா? என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதுபற்றி எனக்கு தெரியாது. கட்சியே அது பற்றி முடிவு செய்யும் என்றார்.

மேலும் செய்திகள்