முக்கிய செய்திகள்:
ராகுலை முத்தமிட்ட பெண் எரித்து கொலையா?

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக அவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை அறிந்து வருகிறார். கடந்த 26–ந்தேதி ராகுல் காந்தி அசாம் மாநிலம் சென்றார். ஜோர்கட் என்ற இடத்தில் அவர் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை செய்தார். இதில் 600 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ராகுல்காந்தி கருத்துக்களை கேட்டார்.

அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை அனைவரது முன்னிலையிலும் கன்னத்தில் முத்தமிட்டார். முத்தமிட்ட இந்த படம் மறுநாள் அனைத்து பத்திரிகையிலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண் கவுன்சிலர் போன்டி தீக்காயங்களுடன் அவரது வீட்டில் பிணமாக கிடந்தார். அந்த பெண்ணின் கணவர் 40 சதவீதம் எரிந்த நிலையில் இருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை எரித்து கொன்று கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ராகுல்காந்தியை முத்த மிட்டது தொடர்பாக தான் போன்டிக்கும், அவரது கணவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மனைவியை அவர் எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.போன்டி, கணவரால் எரித்து கொல்லப்பட்டரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும். இதற்கிடையே எரித்துக் கொல்லப்பட்ட பெண் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று அசாம் போலீசார் மறுத்துள்ளனர்.தீயில் கருகி இறந்தது பெண் கவுன்சிலர் போன்டிதான். ஆனால் அவர் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.

 

மேலும் செய்திகள்