முக்கிய செய்திகள்:
இந்திய-பாக். அதிகாரிகள் அடுத்த மாதம் சந்திப்பு

சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் எல்லையில் லாரி டிரைவரிடமிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது.இந்த சம்பவத்தையடுத்து பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் வியாபாரத்தில் தரமான நடைமுறைகளை அமல்படுத்துவது குறித்து மறுஆய்வு செய்வதற்காக அடுத்த மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்ற மாதம் 17ம் தேதி வடக்கு காஷ்மீரில் நடந்த சம்பவத்தையடுத்து இருநாடுகளுக்கிடையான வர்த்தக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தப்பகுதியை இந்திய வியாபாரிகள் கடந்து செல்ல மூன்று வாரத்திற்கும் மேலாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு இம்மாதம் 20ம் தேதி முதல் ஜம்முவின் பூஞ்ச் - ராவலகோட்டே எல்லையில் வியாபாரம் தொடங்கிய போதும் காஷ்மீரின் யூரி - முசாபர்பாத் சாலையில் வாயிற் கதவுகளை திறக்க பாகிஸ்தான் அதிகாரிகள் மறுக்கின்றனர்.இந்நிலையில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகங்களை அதிகரிக்கவும் அடுத்த மாதம் இருநாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.

 

மேலும் செய்திகள்