முக்கிய செய்திகள்:
பா.ஜ.க.வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களர் பட்டியல் இன்று வெளியிடப்படலாம் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க.வின் உயர்மட்டக்குழு இன்று மத்திய தேர்தல் குழுவைச் சந்திக்கிறது. அப்போது இப்பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சந்திப்பில் இக்கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி, அருண்ஜெட்லி, சுஷ்மாசுவராஜ், முரளி மனோகர்ஜோஷி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இச்சந்திப்பில் குறைந்த தொகுதிகளை கொண்ட மாநிலங்களான மேற்குவங்காளம், கேரளா, ஆந்திராவின் சில பகுதிகள் மற்றும் பா.ஜ.கவின் வெல்வாக்கு அதிகமில்லாத பகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இவர்கள் இன்று உறுதி செய்வர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தொகுதிகள் அதிகம் கொண்ட மாநிலங்களுக்கு மார்ச் முதல் வாரத்தில் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் உயர்மட்டக்குழு வெளியிடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

மேலும் செய்திகள்