முக்கிய செய்திகள்:
இந்துக்கள் ஒவ்வொருவரும் 5 குழந்தைகள் பெறவேண்டும்:அசோக் சிங்கால்

எண்ணிக்கை குறைவதால் இந்துக்கள் ஒவ்வொருவரும் தலா 5 குழந்தைகள் பெறவேண்டும் என விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார். இதுகுறிறத்து, விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் கிங்கால் போபாலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘‘நாட்டின் மத மாற்றம் தடுத்து நிறுத்தப்படவேண்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து மைனாரிட்டி ஆகிவிடுவார்கள். அதை தடுக்க இந்து தம்பதிகள் கட்டாயம் தலா 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.மேலும் அவர் கூறும்போது, விசுவ இந்து பரிஷத்தும், பா.ஜனதாவும் இணைந்து செயல்படவில்லை. இருந்தாலும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை பாராட்டினார். அதேநேரம் காங்கிரஸ் தலைவர் சோனியாவை கடுமையாக தாக்கினார்.போபாலில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அசோக் சிங்கால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார்.

 

மேலும் செய்திகள்