முக்கிய செய்திகள்:
தொங்கு பாராளுமன்றம் என்ற கேள்விக்கே இடமில்லை: அத்வானி

பா.ஜ.க.வின் நல்லநேரம் ஆரம்பித்துவிட்டது. வருகின்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும். எனவே தொங்கு பாராளுமன்றம் என்ற கேள்விக்கே இடமில்லை” என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.

இன்று பா.ஜ.க தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அத்வானி பேசுகையில், “காங்கிரஸ் அரசுக்கு இது கெட்ட நேரம். சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இல்லாத அளவிற்கு ஊழல்மிக்க காங்கிரஸ் இத்தேர்தலில் படுதோல்வி அடையும்.

காங்கிரசின் ஊழல் நடவடிக்கைகள், அதன் கொள்கைகளே அதன் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும். மாறாக பா.ஜ.க பெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறும்” என்று தெரிவித்தார்.இப்பேட்டியின்போது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உடனிருந்தார்.

 

மேலும் செய்திகள்