முக்கிய செய்திகள்:
ராகுல் காந்தியின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் நம்பகத்தன்மை இல்லை: பா.ஜனதா

பாராளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு பெற்றதையடுத்து டெல்லியில் இன்று பா.ஜனதா தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, காங்கிரசின் தோல்வி காரணமாக, ஊழலுக்கு எதிரான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் இதற்கு காரணம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

“ஊழலுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும் ராகுல் காந்தி, ஊழல் எதிர்ப்பு களத்தில் தாமதமாக இணைந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் ஊழலைப்பற்றி பேசியதில்லை.2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு, ஆதர்ஷ் வீட்டுவசதி திட்டம் மற்றும் வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பான ஊழல்கள் வெளிவந்தபோது ராகுல் ஏன் மவுனமாக இருந்தார்? என்று அருண் ஜெட்லி கேள்வி எழுப்பினார்.

“பாராளுமன்ற செயல்பாடு காங்கிரஸ் உறுப்பினர்களால் சீர்குலைக்கப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சியான காங்கிரசோ அதனை கட்டுப்படுத்த வில்லை. ஊழல் எதிர்ப்பு தொடர்பாக ராகுல் காந்தியின் முயற்சிகளில்கூட நம்பகத்தன்மை இல்லை என்று சுஷ்மா குற்றம் சாட்டினார்.

 

மேலும் செய்திகள்