முக்கிய செய்திகள்:
தெலுங்கானா பிரச்சினையால் திருப்பதி கோவிலுக்கு வருமானம் இழப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது உண்டு.நடப்பு 2014–15–ம் நிதி ஆண்டுக்கு ரூ.2,400 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.திருமலையில் இன்று தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

பக்தர்கள் மீது சுமை ஏற்றாமல் கோவில் வருமானத்தை பெருக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை கட்டணம் எதுவும் உயர்த்தப்படாமல் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு கோவில் ஊழியர் சம்பளத்துக்கு மட்டும் ரூ.350 கோடி ஒதுக் கப்பட்டது. இந்த ஆண்டு இந்த தொகை ரூ.380 கோடியாக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மூலமே அதிக வருமானம் கிடைத்து உள்ளது. கடந்த 2012–13–ம் ஆண்டில் உண்டியல் மூலம் ரூ. 859 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால் 13–14–ம் ஆண்டு ரூ. 825 கோடியே வசூலானது.

தெலுங்கானா போராட்டங்களால் ரூ. 34 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப் படுகிறது. தற்போது தெலுங்கானா பிரச்சினை ஓய்ந்து விட்டதால் வரும் நிதி ஆண்டில் கோவில் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகள்