முக்கிய செய்திகள்:
சீமாந்திரா பகுதி மக்களுடன் நீங்கள் இணைந்து செயல்பட வேண்டும்:சோனியாகாந்தி

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இன்னும் 10 நாட்களுக்குள் தெலுங்கானா மாநிலம் உதயமாவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஏற்படுத்தியதற்காக நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை தெலுங்கானா தலைவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தெலுங்கானா பகுதியை சேர்ந்த மத்திய மந்திரிகள் சத்யநாராயணா, பல்ராம் ராயக் மற்றும் 12 எம்.பி.களும் சோனியாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

அப்போது தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த ஆந்திரா மாநில மந்திரிகள் பொன்னம்பிரபாகர், மதுயாச்சி, தெலுங்கானா போராட்டக்குழு தலைவர் கோதண்டராம் ஆகியோரும் உடன் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோனியாவை தெலுங்கானா மாநில தொடக்க விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

அப்போது அவர்களிடம் சோனியா ஒரு எச்சரிக்கையை வெளியிட்டார்.

‘‘சீமாந்திரா பகுதி மக்களுடன் நீங்கள் இணைந்து செயல்பட வேண்டும். அவர்களிடம் பகை உணர்வுடன் நடந்து கொள்ளக்கூடாது. அவர்களுக்கு எதிராக நீங்கள் ஒரு வார்ததை சொன்னால் கூட நான் உங்களது தெலுங்கானா மாநிலத்துக்கு வரமாட்டேன்’’ என்றார்.இதை தெலுங்கானா காங்கிரஸ் ஏற்றுக் கொண்டு சோனியாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகள்