முக்கிய செய்திகள்:
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தோ்தல் தந்திரம்: மம்தா கருத்து

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் காங்கிரசின் தோ்தல் தந்திரம் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாத்திற்கு பதிலளித்த மம்தா மத்திய பட்ஜெட் குறித்து பேசும்போது, “சில பேரை முட்டாளாக்கலாம். ஆனால் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது. ஆட்சியை நிறைவு செய்யவிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் பட்ஜெட்டை அமல்படுத்த முடியாது. அடுத்த நான்கு மாதங்களில் ஏற்பட உள்ள செலவுகளுக்கு இப்போது ஒப்புதல் பெறப்படுகிறது” என்றார்.மம்தா பானர்ஜி பேசும்போது, எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்