முக்கிய செய்திகள்:
பட்ஜெட் பாராட்டுக்குரியது: மன்மோகன் சிங்

நாட்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார நிலைமை குறித்து உண்மை தகவலை வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

எத்தரப்பும் பாதிக்காத வகையில் பட்ஜெட் அமைந்திருப்பதற்காக நிதியமைச்சரை பாராட்டுவதாக தெரிவித்த பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை பறை சாற்றுவதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாணவர்களின் திறனை மேம்படுத்தும் முயற்சியில் அவர்கள் வாங்கிய கல்விக்கடன்களுக்கு மானியம் வழங்கியதை சுட்டிக்காட்டிய பிரதமர், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு நாடு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றார். ஒரே மதிப்பு-ஒரே ஓய்வூதியம் என்ற திட்டம் நமது நாட்டின் பாதுகாப்பு வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

மேலும் செய்திகள்